இப்பொழுதுதான் என் ப்ளாக்கில் சமையல் தவிர்த்து வேறு ஒரு பதிவு போடுகிறேன்.தொடர்பதிவு,சமையல் இவற்றை மட்டும்தான் என் ப்ளாக்கில் எழுதி வந்தேன்.முதன்முதலில் க்ராப்ட் ஒர்க் பற்றி எழுதுகிறேன்.
நான் வசிக்கும் கீழ் வீட்டு ப்ரெஞ்சுக்கார பாட்டியிடம் கற்றுக்கொண்டது.அவர்களும் ரொம்ப ஆர்வமா சொல்லிக் கொடுத்தாங்க.நான் பேசுற ப்ரெஞ்சை பாட்டி சூப்பரா புரிஞ்சிக்கிறாங்க.அதைவிட பாட்டிக்கு ஆங்கிலமும் தெரியாது.
இது நான் முதல் முதலில் என் பொண்ணுக்காக பின்னிய உல்லன் குல்லா.இதை பின்னி முடிக்க எனக்கு 10 நாள் ஆனது.பாட்டி 1 1/2 மணிநேரத்தில் முடித்துவிடுவாங்களாம்.ரொம்ப ஆச்சர்யமா இருக்குல்ல...
2நாளில் அடிப்படை பின்னல்கள் தெரிந்துக்கொண்டேன்.ஒவ்வொரு முறையும் தவறாக பின்னிய போது அதை பொறுமையோடு எபப்டி சரியா பின்னனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.அவங்களுக்கு ரொம்ப பொறுமை.
நான் இதுபோல் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது எனக்கு அந்த பொறுமை வருமான்னு தெரியல....
என்னுடைய ஆர்வத்தினால் பாட்டி எனக்கு ஒரு உல்லன் நூல்+ஊசி கொடுத்தாங்க.அதில்தான் பின்னுகிறேன்.
She is such a very Kind,Intelligent & Patience Woman.I Love Her Very Much...A Big Hug to that Grandma...
இதை பின்னுவதற்க்கு 2 ஊசிகள் வேணும்.படத்தில் ஒரு ஊசிதான் இருக்கு.இன்னொரு ஊசில் நான் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பதால் ஜோடியாக எடுக்கமுடியல.கற்றுக்கொண்ட பிறகு ரொம்ப ஈஸியாக இருக்கு.ஒரு உல்லன் பண்டல் வாங்கினால் பெரியவர்களுக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னலாம்.விலையும் 6 யூரோதான்.
முடிந்தால் பாட்டி பின்னும்போது வீடியோவாக எடுத்துப் போட முயற்சிக்கிறேன்.
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
தோழி சிநேகிதி,விமிதா கொடுத்த விருது.2வருக்கும் மிக்க நன்றி!!

0 comments:
Post a Comment