Sunday, January 22, 2012

கத்திரிக்காய் கொத்தமல்லி பச்சடி / Brinjal Coriander Pachadi

திருமதி. சோலை அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

தே.பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் - 4
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
புளிபேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
சீரகம் - 1 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+சாம்பார் பொடி+கத்திரிக்காய் சேர்த்து வதக்கி 1 கப் நீர்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*5நிமிடத்திற்க்கு பின் புளிபேஸ்ட்+வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.

*பின் கொத்தமல்லித்தழை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*கலவை கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்கவேண்டும்.கத்திரிக்காய் அதிகநேரம் வேகவைக்கவேண்டாம்.

*இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.


0 comments:

Post a Comment