Wednesday, January 18, 2012

காலிபிளவர் பட்டாணி மசால் தோசை/Cauliflower Peas Masala Dosa

 வழக்கமாக நாம் மசால் தோசைக்கு உருளையை வைத்துதான் செய்வோம்.இந்தமுறை இந்தியாவுக்கு சென்றபோது ஹோட்டலில் இந்த தோசையை சாப்பிடும்போது ரொம்ப பிடித்துவிட்டது.செய்துபார்த்ததில் அதேமாதிரி சுவையுடன் இருந்தது....

காலிபிளவர் பட்டாணி மசாலா

தே.பொருட்கள்

காலிபிளவர் - 1 நடுத்தரசைஸ்
ப்ரோசன் பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 விழுதாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 செய்முறை

*காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 10நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.


*பின் தக்காளி விழுது+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.


*வேகவைத்த காலிபிளவர்+பட்டாணி சேர்த்து நன்கு கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.

மசால் தோசை செய்ய

இட்லி/தோசை மாவு - 3 கப்
காலிபிளவர் பட்டாணி மசாலா - தேவைக்கு
எண்ணெய்/ நெய் - தேவைக்கு

செய்முறை

*தோசைக்கல்லில் எண்ணெய் தடவி 1குழிக்கரண்டி மாவை விட்டு மெலிதாக வார்க்கவும்.
 *சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.தோசை 1பக்கம் வெந்தபிறகு மசாலாவை ஒருபக்கம் வைக்கவும்.
 *பின் அப்படியே மடித்து எடுத்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.
பி.கு

*தோசை ஒருபக்கம் வெந்த பிறகு திருப்பிபோடகூடாது.

*மாவு கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தோசை மெலிதாக சுட வரும்.

*நான் தக்காளி சட்னி,காரகுழம்புடன் பரிமாறியுள்ளேன்..

0 comments:

Post a Comment