தே.பொருட்கள்:கோதுமை மாவு - 2 கப்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:*கோதுமைமாவில் உப்பு கலந்து நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*உருளைக்கிழங்கில் உப்பு+வெங்காயம்+கரம்மசாலா+மல்லித்தழை நைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*கோதுமைமாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து லேசாக உருட்டி அதனுள் சிறிதளவு உருளை கலவையை வைத்து மூடி லேசாக மெலிதாக தேய்க்கவும்.

*ஸ்டப்பிங் செய்த பாகத்தை அடிப்பக்கமாக வைத்து தேய்த்து உருட்டினால் கலவை வெளியே வராது.
*தவாவில் தேய்த்த சப்பாத்தியை எண்ணெய் விட்டு இருபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
0 comments:
Post a Comment