Thursday, January 27, 2011

மாந்தோல் குழம்பு/ Dry Mangopeel Khuzhampu


இந்த குழம்பு புளி+தக்காளி இல்லாமல் செய்வது.மாந்தோலின் புளிப்பே போதுமானது.மாந்தோல் என்பது மாங்காயை உப்பில் ஊறவைத்து காயவைத்த மாங்காய்.

தே.பொருட்கள்:
மாந்தோல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 6
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
* மாந்தோலை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து குக்கரில் சிறிதளவு நீர் வைத்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*வெந்ததும் நன்கு மசித்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல் சேர்த்து வதக்கி மசித்த மாந்தோல்+சாம்பார்பொடி+தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நன்கு கொத்தித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

பி.கு:
மாந்தோலில் நிறைய உப்பு இருப்பதால் உப்பின் அளவை பார்த்து போடவும்.

0 comments:

Post a Comment