Thursday, April 7, 2011

முட்டையில்லாத ஆரஞ்ச் கேக் ரஸ்க் / Eggless Orange Cake Rusk

மகியின் குறிப்பை பார்த்து சிலமாற்றங்களுடன் செய்தது.நன்றி மகி!! கேக்காக செய்திருந்தால் 3 நாள் வரை இருக்கும்.இது செய்தவுடன் பாதி கேக்காகவும்,மீதி ரஸ்காகவும் செய்தவுடன் நானும் என் பொண்ணும் காலிபண்ணிட்டோம்.

தே.பொருட்கள்
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
ஆரஞ்ச் ஜூஸ் -1/2 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1 1/4 கப்
வெண்ணெய் -1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
விருப்பமான நட்ஸ் வகைகள் - 1/4 கப்
தயிர் - 125 கிராம்
எள் -மேலே தூவ

செய்முறை

*வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து நன்கு பீட் செய்யவும்.மைதாவுடன் பேக்கிங் சோடாவை கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் தயிர்+ஆரஞ்ச் ஜூஸ்+ஆரஞ்ச் தோல்+மைதா+நட்ஸ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கலக்கவும்.

*கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி எள்ளை தூவி,180°C முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் பேக் செய்யவும்.

*கேக் ஆறியதும் துண்டுகளாகி அவன் டிரேயில் வைத்து மீண்டும் அவனில் 140°C ல் 1 1/4 மணிநேரம் பேக் செய்யவும்.

*ஆரஞ்ச் சுவையுடன் ரஸ்க் தயார்.காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment