இன்றையநாள் எனக்கு ரொம்ப மறக்கமுடியாதநாள்...என் ப்ளாக் ஜனவரியில் தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது,ஆனலும் குறிப்புகளை இந்த நாளில்தான் தர ஆரம்பித்தேன்..இன்னொன்று இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் கோப்பையை வென்றுள்ளது.மற்றொன்று உலகமே கொண்டாடும் இந்நாள் மறக்கமுடியாது....ஆகா ரொம்ப ஸ்பெஷல்நாள்.
கோதுமையில் தான் அல்வா செய்வோம்,ஒரு மாறுதலுக்காக கோதுமைரவையில் செய்தேன்.மிகவும் நன்றாகயிருந்தது...
தே.பொருட்கள்
கோதுமைரவை - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய்தூள் -1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
செய்முறை
*கோதுமைரவையை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
*ஊறியதும் கிரைண்டரில் அரைத்து 2,3 முறை பால் பிழியவும்.சல்லடையில் பிழிந்தால் நன்றாக பிழிய வரும்.
*பிழிந்த பாலை 3 மணிநேரம் தெளியவைத்து மேலோடு இருக்கும் நீரை ஊற்றிவிடவும்.அடியில் கெட்டியான பால் தங்கியிருக்கும்.
*அடிகனமான நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+1 கப் நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
*பின் கோதுமைப்பாலை ஊற்றி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
*இடையிடேயே நெய்யை கொஞ்சகொஞ்சமா ஊற்றவும்.
*பின் ஏலக்காய்த்தூள்+முந்திரி சேர்த்து ஒன்றாக கிளறி கெட்டியாகி நெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
*சுவையான அல்வா தயார்!!
பி.கு
விருப்பமுள்ளவர்கள் கேசரிகலர் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

0 comments:
Post a Comment