தே.பொருட்கள்
ரவை - 1 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் -1/4 டீஸ்பூன்
(அ)
ஆரஞ்சு எசன்ஸ் - 2 துளி
ஏலக்காய்த்தூள் - சிறிது
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர் - 1 சிட்டிகை
செய்முறை
* ரவையை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.அதில் கேசரிக்கலர்,ஆரஞ்ச் தோல் சேர்க்கவும்.
*தண்ணீர் கொதித்ததும் ரவையை கொட்டி கட்டி விழாமல் கிளறவும்,வெந்ததும் சர்க்கரை+ஆரஞ்ச் ஜூஸ் சேர்த்து கிளறவும்.
*கெட்டியாக வரும் போது மீதமுள்ள நெய்+முந்திரி திராட்சை,ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

0 comments:
Post a Comment