Thursday, March 24, 2011

வெஜ் தாள்ச்சா/ Veg Thalchaa

தே.பொருட்கள்

வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள்,தனியாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
முருங்கைக்காய் - 1
மாங்காய் -1
கத்திரிக்காய் - 3
தேங்காய் விழுது - 1/4 கப்
புளிகரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+கரம் மசாலா+தனியாத்தூள்+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+நறுக்கிய முருங்கை,கத்திரிக்காய் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் சிறிதளவு நீர்+உப்பு சேர்த்து காய்களை வேகவைக்கவும்.
*காய்கள் வெந்ததும் புளிகரைசல்+மாங்காய் சேர்க்கவும்.
*மாங்காய் வெந்ததும் தேங்காய் விழுது+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*கடைசியாக வேகவைத்த துவரம்பருப்பு சேர்க்கவும்.
*பின் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.

*நெய் சாதத்துடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

*இதனுடன் மட்டன் எலும்பு சேர்த்து செய்தால் மட்டன் தாள்ச்சா ரெடி!!

0 comments:

Post a Comment