Thursday, October 7, 2010

ஜாங்கிரி

தே.பொருட்கள்:
வெள்ளை முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எலுமிச்சை சாறு - 1/2 டேபிஸ்பூன்

செய்முறை:
*உளுந்தை 1 மனிநேரம் ஊறவைத்து நன்கு வெண்ணெய் போல் சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் அரிசிமாவு+சிறிது நீரில் புட்கலர் கலக்கவும்.மாவு ஒட்டையில் விழும் பதமாக இருக்க வேண்டும்.
*ஒரு ஜிப்லாக் கவரில், ஒரு கம்பி எடுத்து லேசாக சூடு செய்து ஒட்டையை மெலிதாக போடவும்.

*ஒட்டை போட்ட கவரில் மாவை நிரப்பி படத்தில் உள்ளவாறு பிழியவும்.முதலில் 2 வட்டங்கள் போட்டு அதன்மேல் குட்டி குட்டி வளையங்கள் போல் பிழியவும்.2,3 முறை போட்டவுடன் அழகாக வரும்.
*எண்ணெய் காயவைத்து நேரடியாக மாவை பிழியவும்.ஒரு புறம் வெந்ததும்,மறுபுறம் திருப்பி வேகவிடவும்.ரொம்பவும் முறுகலாக எடுக்ககூடாது.
*இன்னொரு அடுப்பில்,பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் எலுமிச்சை சாறு+ரோஸ் எசன்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*பொரித்த ஜாங்கிரிகளை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*1/2 மணிநேரம் கழித்து பரிமாற அனைவருக்கும் பிடித்த சுவையான ஜாங்கிரி ரெடி!!
பி.கு:
*ஒட்டையை மிக மெலிதாக போடவும்.மாவு சரியாக பிழிய வரவில்லையெனில் சிறிதளவு நீர் சேர்த்து கலக்கவும்.

*சர்க்கரை பாகு தண்ணீயாக இல்லாமலும்,கெட்டியாக இல்லாமலும் இருக்கனும்.

*பொரித்த ஜாங்கிரியும்,சர்க்கரை பாகும் சூடாக இருக்கனும்.

0 comments:

Post a Comment