Thursday, October 28, 2010

டிரை ஜாமூன்(Dry Jamun)

பிரேமலதா அவர்களின் குறிப்பை பார்த்து செய்தேன்.சூப்பரோ சூப்பர்ர்..மிக்க நன்றி பிரேமலதா!!
தே.பொருட்கள்:
பால் பவுடர் - 1 கப்
மைதா - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
ரவை - 1 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையான அளவு
சர்க்கரை - 1/2 கப் + 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:
* ஒரு பவுலில் ரவையை சிறிது பால் விட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பின் அதனுடன் பால் பவுடர்+மைதா+நெய்+பேக்கிங் சோடா அனைத்தையும் ஒன்றாக கலந்து பால் விட்டு கெட்டியாக பிசையவும்.
*மாவு பதம் மிகவும் மிருதுவாக இருக்கவேண்டும்,கைகளில் ஒட்டக்கூடாது.
*சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை+தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.

*பொரித்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் 1-2 மணிநேரங்கள் ஊறவிடவும்.
*ஒரு தட்டில் 1/4 கப் சர்க்கரையை கொட்டி ஊறிய ஜாமூன்களை ஒவ்வொன்றாக அதில் புரட்டி எடுக்கவும்.
*ப்ரிட்ஜில் சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும்.சுவையான டிரை ஜாமூன் ரெடி!!

0 comments:

Post a Comment