Tuesday, April 13, 2010

தேங்காய்ப்பால் ரசம் - 1

தே.பொருட்கள்:

தேங்காய் - 1/2 மூடி
எலுமிச்சை பழம் - 1
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிது
 
செய்முறை :
*தேங்காயை துருவி அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து 2ம் பாலை ஊற்றவும்.

*உப்பு+மஞ்சள்தூள் சேர்க்கவும்.

*1 கொதி வரும் போது முதல் பாலை ஊற்றவும்.

*நுரை வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
 
பி.கு:
முதல் பாலை ஊற்றியதும் கொதிக்கவிடக்கூடாது.அடுப்பிலிருந்து இறக்கும்போதுதான் எலுமிச்சைசாறு ஊற்றவும்.புளிப்பு வேண்டுமானால் மேலும் 1 பழம் பிழிந்து ஊற்றவும்.டின் பாலையும் உபயோக்கிக்கலாம்.

0 comments:

Post a Comment