Friday, April 30, 2010

பனீர் ஆனியன் குல்சா

தே.பொருட்கள்:

மைதாமாவு - 3 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
துருவிய பனீர் - 1 கப்
 
செய்முறை :
*மாவில் தேவையான உப்பு சேர்த்து சர்க்கரை+பட்டர்+தயிர்+எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து ஈரமான துணிபோட்டு மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை தேவையான உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

*பிசைந்த மாவில் சிறு உருண்டையாக எடுத்து உருட்டி அதனுள் ஸ்டப்பிங் கலவையை வைத்து மறுபடியும் மூடி லேசாக உருட்டு கட்டையில் தேய்க்கவும்.

*ஸ்டப்பிங் எல்லா இடத்திலும் இருக்குமாறு தேய்க்கவும்.

*தேய்த்த குல்சாவை நான் ஸ்டிக் கடாயில் போட்டு 2புறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.தேவைப்பட்டால் இருபுறமும் நெய் தடவி சுட்டு எடுக்கலாம்.

*மிகவும் அருமையாக இருக்கும்.2 குல்சா மேல் சாப்பிடமுடியாது.விருப்பமான சைட் டிஷுடன் சாப்பிடவேண்டியதுதான்..

0 comments:

Post a Comment