Thursday, April 15, 2010

கத்திரிக்காய் சாதம் -2

தே.பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பெரிய கத்திரிக்காய் - 1
உதிராக வடித்த சாதம் - 3 கப்
நீள வாக்கில் அரிந்த வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
முந்திரி -தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
முளைக்கட்டிய வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து வைக்கவும்.அதே கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+பச்சை மிளகாய்+கத்திரிக்காய்+உப்பு அனைத்தையும் நன்கு எண்ணெயிலேயே வதக்கவும்.தண்ணீர் ஊற்றக்கூடாது.

*அனைத்தும் நன்கு வதங்கியதும் பொடித்து பொடியைத் தூவி நன்கு வதக்கி ஆறவைக்கவும்.

*ஆறியதும் சாதம் சேர்த்து நன்கு கிளறி முந்திரி சேர்த்து பரிமாறவும்.

0 comments:

Post a Comment