Wednesday, April 7, 2010

முட்டையில்லாத வாழைப்பழ பான்கேக்ஸ்

தே.பொருட்கள்:

மைதா - 1 கப்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
பால் - 3/4 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பட்டர் - சுடுவதற்க்கு
 
செய்முறை :

*ஒரு பவுலில் மைதா+சர்க்கரை+உப்பு+பேக்கிங் பவுடர்+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*இன்னொரு பவுலில் வாழைப்பழத்தை மசிக்கவும்.அதனுடன் வெனிலா எசன்ஸ் + மைதா கலவை +பால் சேர்த்து கலக்கவும்.

*கலவை ரொம்ப திக்காக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்க்கவும்.

*தவாவில் பட்டர் விட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.தேய்க்க கூடாது,அதுவே பரவிக்கொள்ளும்.

*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு தேனுடன் பரிமாறவும்.

Sending this recipe to Pancakes event started by Priya

0 comments:

Post a Comment