
பஜ்ஜி மிளகாய் - 5
துருவிய சீஸ் -1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
துருவிய கேரட்,கோஸ்,காலிபிளவர் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*மிளகாயை நடுவில் கீறி உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி பின் துருவிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உருளைகிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
*கடலை மாவு+அரிசி மாவு+உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.
*மிளகாயில் சீஸ் துருவலை வைத்து அதனுள் உருளைக்கலவையை வைத்து அதன் மேல் மேலும் சீஸ்துருவலை வைத்து மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
0 comments:
Post a Comment