Wednesday, April 14, 2010

மசாலா டீ

தே.பொருட்கள்:
பால் - 1 கப்
டீ பேக் - 1
சர்க்கரை - இனிப்புக்கேற்ப

பொடிக்க:
ஏலக்காய் -7
பட்டை - 1 சிறுதுண்டு
சுக்கு - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
மிளகு - 3
 
செய்முறை :
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.(எனக்கு ஏலக்காய் வாசனை ரொம்ப பிடிக்கும்.அதனால் நான் அதிகம் சேர்ப்பேன்.ஏலக்காய் டீ குடித்தால் டென்ஷன் குறையும்,மூளை சுறுசுறுப்பாகும்.புக்கில் படித்தது).

*பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து கொதித்ததும் டீ பேக் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பாலை சேர்த்து கொதிக்க வைத்து பொடித்த பொடியில் 1 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.

*கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.சுவையும் மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.
 
பி.கு:
ஊரிலிருந்து வரும் போது 3 ரோஸஸ் மசாலா டீ 2 பாக்கெட் வாங்கி வந்தேன்.அதில் ஒரு வாசனையும்,ருசியும் இல்லை.வீணாக்க கூடாதுன்னு அதைபோட்டு குடிக்கிறேன்.இனி வாங்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

0 comments:

Post a Comment