Sunday, May 2, 2010

வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ்

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 /2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :
*சிறிது வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை+ஈஸ்ட் கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

*வெந்தயக்கீரையை சிறிது வெந்நீரில் உப்பு சேர்த்து நன்கு அலசி பிழிந்து வைக்கவும்.

*ஒரு பவுலில் மாவு+உப்பு+சீரகப்பொடி+ஆலிவ் எண்ணெய்+வெந்தயக்கீரை கலந்து ஈஸ்ட் கலவையை ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1--2 மணிநேரம் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து மாவு உப்பியிருக்கும்,மறுபடியும் பிசைந்து 1 மணிநேரம் வைக்கவும்.

*மீண்டும் 1 மணிநேரம் கழித்து மாவை நன்கு பிழைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

*உருட்டிய ஒரு உருண்டையை எடுத்து மெலிதாக கைகளால் நீளவாக்கில் உருட்டி அவன் டிரேயில் வைக்கவும்.

*அனைத்து உருண்டைகளும் இப்படியே செய்து மறுபடியும் உப்பி வருவதற்காக 20 நிமிடம் வைக்கவும்.

*பின் 220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு
வெந்தயக்கீரைக்கு பதில் ப்ரெஷ் பேசில் இலைகள் சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment