Thursday, May 20, 2010

தேங்காய் இடியாப்பம்

தே.பொருட்கள்:
இடியாப்ப மாவு - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*இடியாப்ப மாவில் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கும் நீர் சேர்த்து கரண்டியால் சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசையவும்.

*பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேர்க்கடலை+வெங்காயம்+தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கிய பின் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 
பி.கு:
*உப்பு தேவையானால் மட்டும் சேர்க்கவும்.இதில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment