Sunday, May 23, 2010

மாம்பருப்பு குழம்பு

வெயில் காலத்தில் மாங்காயை பக்கவாட்டில் மட்டும் பிளந்து உப்பில் போட்டு நன்கு காயவைத்து உபயோகப்படுத்துவோம்.அந்த மாங்காயின் சதைப்பகுதியை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் கொட்டையை மட்டும் எடுத்து சமைக்க பயன்படுத்தலாம்.இந்த மாம்பருப்பு குழம்பு வயிற்றுப்போக்கு இருக்கும் சமயத்தில் உண்டால் நல்லது.

தே.பொருட்கள்:
காயவைத்தெடுத்த மாங்கொட்டை - 2
புளிகரைசல் - 1 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*மாங்கொட்டையை சுத்தியால் தட்டி பொடிக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய் விட்டு மாங்கொட்டை+சீரகம்+மிளகு+சின்ன வெங்காயம்+பூண்டு+கறிவேப்பிலை அனைத்தையும் வதக்கி மைய அரைக்கவும்.

*புளிகரைசலில் உப்பு+மிளகாய்த்தூள்+அரைத்த விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய்விட்டு வடகத்தை போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
Sending this recipe to Shabitha's CELEBRATING MOM event

0 comments:

Post a Comment