Monday, May 31, 2010

சிக்கன் கட்லட்

தே.பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடித்த ஒட்ஸ் - தே.அளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*சிக்கனில் வரமிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+உப்பு+கரம் மசாலா+சிறிதளவு நீர் விட்டு 2 விசில் வரை வேகவைக்கவும்.

*சிக்கனில் நீர் இருந்தால் அதனை வற்றும் வரை நன்கு பிரட்டவும்.

*ஆறியதும் கையால் நன்கு உதிர்த்து வெங்காயம்+பச்சைமிளகாய்+உருளைக்கிழங்கு+புதினா கொத்தமல்லி+தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும்.

*தளர்த்தியாக இருந்தால் பொடித்த ஒட்ஸினை சிறிதளவு சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.

*தேவையானளவில் உருண்டையாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

0 comments:

Post a Comment