Tuesday, June 1, 2010

பிஸ்கட் அல்வா


இது என் 300வது பதிவு!! பாலோவர்ஸ் மற்றும் தமிலிஷ்,தமிழ்மணத்தில் ஒட்டு போடும் அனைவருக்கும் நன்றி!! சுவை ரொம்ப சூப்பர்ர்.ஈசியாகவும் உடனே செய்திடலாம்.

தே.பொருட்கள்:
மேரி பிஸ்கட் - 15
பால் - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*சர்க்கரை+பிஸ்கட் பாலில் 10 நிமிடம் ஊறவிடவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து பாலில் ஊறிய பிஸ்கட்டை போட்டு நன்கு சுண்டும் வரை கிளறவும்.

*சுருண்டு வரும் போது மீதமிருக்கும் நெய்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.


பி.கு:

*நெய் தான் போதுமானதாக இல்லை.இன்னும் நிறைய நெய் சேர்த்து கிளறியிருந்தால் நல்லாயிருக்கும்.சர்க்கரையை அவரவர் இனிப்பிற்கேற்ப சேர்க்கவும்.

*மேரி பிஸ்கட் பதிலாக சாக்லேட் பிஸ்கட்டில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

0 comments:

Post a Comment