Wednesday, June 30, 2010

Pretzels

தே.பொருட்கள்:
மைதாமாவு - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்நீர் - 1 கப்
 
செய்முறை :
*சிறிது வெந்நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ஒரு பவுலில் மாவு+உப்பு+பட்டர் அனைத்தையும் ஒன்றாக கலந்து பொங்கிய ஈஸ்ட் கலந்த நீரை ஊற்றவும்.பின் வெந்நீர் ஊற்றி மாவை நன்கு மிருதுவாக பிசைந்து ஈரத்துணி மூடி வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.

*1 மணிநேரம் கழித்து மாவு 2மடங்காக உப்பியிருக்கும்.மிருதுவாக பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பிசைந்த மாவில் சிறு உருண்டையாக எடுத்து மிக நீளமான கயிரு போல் உருட்டி படத்தில் உள்ள ஷேப்பில் செய்து கொள்ளவும்.
*230°C முற்சூடு செய்த அவனில் 8 - 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment