Friday, May 21, 2010

மட்டன் சுக்கா வறுவல்

இந்த குறிப்பு டி.வியில் பார்த்து செய்தது.

தே.பொருட்கள்:
மட்டன் - 3/4 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
சோம்பு - 1 1 /2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 4

மட்டனில் வேகவைக்க:

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
அரிந்த வெங்காயம்+தக்காளி - தலா 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*சுத்தம் செய்த மட்டனில் வேக வைக்க கொடுத்துள்ளவைகளை போட்டு சிறிது நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள்வகைகள் சேர்த்து வதக்கி வேகவைத்த மட்டன்+உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

*கொஞ்சம் காரம் அதிகமா இருக்கும்.காரம் குறைவாக சாப்பிடுபவர்கள் அளவுகளை குறைத்து போடவும்.

0 comments:

Post a Comment