Wednesday, May 12, 2010

பனீர் கோஃப்தா

தே.பொருட்கள்:

கோஃப்தா செய்ய:
துருவிய பனீர் - 100 கிராம்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

க்ரேவிக்கு:
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :

*கோஃப்தா செய்ய கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து உருண்டைகளாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*கடாயில் சிறிது பட்டர் விட்டு வெங்காயம்+தக்காளி+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்ரன் பின் ஒன்றாக போட்டு வதக்கி ஆறவைத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள பட்டரை விட்டு சீரகத்தைப் போட்டு தாளித்து அரைத்த மசாலா + தேவையான நீர்+உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

*பரிமாறும் போது க்ரேவியை சூடு செய்து கோப்தாக்களைப்போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பி.கு:
தேவையானால் சிறிது ப்ரெஷ் கீரிம் சேர்த்தும் பரிமாறலாம்.பரிமாறும் போதுதான் கோப்தாக்களை போடவும்.

0 comments:

Post a Comment