Thursday, May 27, 2010

தயிர் கேக்

என் அக்காவிடம் சுட்ட குறிப்பு...
 
தே.பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
தயிர் - 125 கிராம்
வெனிலா சர்க்கரை - 1 பாக்கெட்
முட்டை - 3
பட்டர் - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை :
*முட்டை+சர்க்கரை+பட்டர் நன்கு கரையும் வரை அடிக்கவும்.மைதாமாவில் பேக்கிங் பவுடரை கலந்து வைக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் மாவு+தயிர்+வெனிலா சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலந்து கேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் தடவி கலவையை ஊற்றவும்.

*அவனை 180°C முற்சூடு செய்து 25 - 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
 
பி.கு:
தயிரை எந்த கப்பில் அளக்கிறமோ அந்த கப்பில் தான் மாவு+சர்க்கரை அளக்க வேண்டும்.நான் தயிர் இருக்கும் கப்பிலயே அளந்து போட்டுள்ளேன்.உதாரணமாக தயிர் 1 கப் என்றால் மாவு = சர்க்கரை = 2 கப் போடவேண்டும்.

0 comments:

Post a Comment