Monday, May 24, 2010

வெஜ் இடியாப்பம்

தே.பொருட்கள்:

வேகவைத்து உதிர்த்த இடியாப்பம் - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி - 1 கைப்பிடி
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
துருவிய கேரட் - 1
பொடியாக அரிந்த பீன்ஸ் - 10
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு+புதினா கொத்தமல்லி+காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 3/4 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

*காய்கள் நன்கு வெந்ததும் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

*வெஜ் பிரியாணி மாதிரி இருக்கும் இந்த இடியாப்பம்..

0 comments:

Post a Comment