Monday, May 24, 2010

கினோவா கட்லட் (அவன் செய்முறை) / Quinoa Cutlet

தே.பொருட்கள்:

வேகவைத்த கினோவா - 1/2 கப்
முளைகட்டிய பச்சைபயிறு,சென்னா - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*முளைகட்டிய பயிறுகளை ஆவியில் வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தேவையான அளவில் உருண்டை செய்து விருப்பமான வடிவில் கட்லட்டுகளாக செய்துக் கொள்ளவும்.

*அவன் டிரேயில் வைத்து ஒவ்வொரு கட்லட் மீதும் 1 சொட்டு எண்ணெய் தடவும்.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு 1 சொட்டு எண்ணெய் தடவவும்.

*அவனை 190°C டிகிரி முற்சூடு செய்து 30-40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment