
ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
முந்திரி - தேவைக்கு
துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்
கொதி நீர் - 2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
* பாசிப்பருப்பை மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு மிளகு+இஞ்சி+கறிவேப்பிலை+முந்திரி+பெருங்காயத்தூள்+சீரகம் நைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
*பின் ரவையையும் சேர்த்து நன்கு வறுக்கவும்.ரவை வறுபட்டதும் பால்+கொதிநீர் சேர்த்து வேகவிடவும்.
*ரவை வெந்ததும் வேகவைத்த பாசிப்பருப்பு+உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment