Thursday, November 11, 2010

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு - 2/ Ennai Khatirikkai Khuzhampu - 2

விஜிசத்யாவின் குறிப்பை பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்:குட்டி கத்திரிக்காய் - 8
சின்ன வெங்காயம் - 15
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
தனியாத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1 1/2 கப்
வெல்லம் - சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:*கத்திரிக்காயை காம்போடு 4ஆக பிளந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் +சீரகம்+வெங்காயம் சேர்த்து வதக்கி ஆறவைத்து அதனுடன் தேங்காய்த்துறுவல்+கசகசா+தனியாத்தூள் சேத்து நைசாக அரைக்கவும்.

*அரைத்த விழுதை எடுத்து நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயில் நிரப்பவும்.மீதமுள்ள விழுதை புளிகரைசலில் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை+பூண்டு சேர்த்து தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கத்திரிக்காய் வெந்து கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

*சுவையான குழம்பு ரெடி!!இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் சூப்பர்..

0 comments:

Post a Comment