Tuesday, November 23, 2010

பாதாம் சூப் / Almond Soup

கீதா பாலகிருஷ்ணன் அவர்களின் குறிப்பை புத்தகத்தில் பார்த்து செய்தது.

பாதாம் பருப்பில் நிறைய புரதசத்து,நார்ச்சத்து,வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைய இருக்கு.ஒமேகா3,6 கொழுப்பு சத்து நிறைந்தது.இந்த கொழுப்பு சத்தின் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க வல்லது.ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும்,எலும்பை வலுப்படுத்தவும் சிறந்தது.தோலுக்கும் மிக நல்லது.இதயத்திற்க்கு மிகவும் நல்லது.

தே.பொருட்கள்:பாதாம் - 50 கிராம்
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
குரூட்டன்ஸ் - சிறிது
காய்கறி வேகவைத்த நீர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

ஒயிட் சாஸ் செய்யவெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்

செய்முறை:*பாதாம் பருப்புகளை கொதிநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தபின் தோலெடுத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் வெண்ணெய் விட்டு ,குளிந்த பாலில் கோளமாவு+மைதா மாவு கலவையைக் கரைத்து அதில் சேர்த்து கெட்டியாகிவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

*சற்று கெட்டியானதும் ஒயிட் சாஸ் ரெடி!!

*பாலை கொதிக்கவிட்டு பாதாம் விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பாதாம் விழுது பாலில் வெந்த வாசம் வந்ததும் காய்கறி நீர்+ஒயிட் சாஸ்+உப்பு+மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது குரூட்டன்ஸ் தூவி பருகவும்.சுவையான சூப் ரெடி!!

*1 கப் குடித்தாலே வயிறு நிறைந்துவிடும்.

0 comments:

Post a Comment