Friday, July 9, 2010

ஆம்பூர் சிக்கன் பிரியாணி



எனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை என் டைரியில் எழுதி வைப்பது வழக்கம்.இந்த குறிப்பினை நான் எப்போழுதோ டி.வியில் பார்த்து எழுதி வைத்தேன்.அந்த டைரியும் தொலைந்து போய் ஏதோ ஒரு பொருள் தேடுகையில் அந்த டைரி கிடைத்தது.அதில் நான் எழுதிய குறிப்பை பார்த்து செய்தது....
ஆம்பூர் பிரியாணி எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.காரணம் அதில் நெய்(அ) டால்டா சேர்ப்பதில்லை.மேலும் நாம் மசாலா சேர்த்து வதக்கும் பக்குவத்தில் இருக்கு.இதில் சாதாரணமாக குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து செய்வது.பச்சை மிளகாய்,கரம் மசாலா,தேங்காய்ப்பால் இதெல்லாம் சேர்க்க வேண்டியதில்லை.

நான் பிரியாணியை எப்போழுதும் அவனில் தான் தம் போடுவேன்.190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் தம் போட்டால் சரியாக இருக்கும்.
தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 1 பெரியது
அரிந்த தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்,சிகப்பு புட்கலர் - தலா 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கிராம்பு - 5
ஏலக்காய் - 6
செய்முறை :
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்த பின் அரிசியை போட்டு 10 நிமிடத்தில் வடித்துவிடவும்.தம் போட சரியாக இருக்கும்.

*வெங்காயம் வதங்கியதும் பூண்டு விழுது+புதினா கொத்தமல்லி+இஞ்சி விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+தயிர் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கனைப் போட்டு 15 நிமிடம் வதக்கவும்.1 கப் நீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

*கிரேவி நன்கு கொதித்து சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து பின் வடித்த அரிசியை கொட்டி சமன்படுத்தி 2 புட்கலர்களையும் மேலே ஊற்றி தம் போடவும்.

*அவன் இல்லாதவர்கள் தோசை கல்லை காயவைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து பாத்திரத்தை சுற்றிலும் அலுமினியம் பேப்பரால் நன்கு இறுக மூடி போடவும்.

*15 நிமிடம் கழித்து சாதத்தை உடையாமல் நன்கு கிளறி விட்டால் சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி!!

Sending this recipe to '' I Love My Dad'' Event by Jay.

0 comments:

Post a Comment